எளிமையாய்ப் பாக்கள் எழுதலாம்: US / Europe | இந்தியா
நெஞ்சத்தைம்பது: US / Europe | இந்தியா
பண்டைத் தமிழர் தம் சிந்துவெளி நாகரிகம்: US / Europe | இந்தியா
பாடங்கள்:
தமிழ் இலக்கணம் (காணொளிப் பதிவு)
யாப்பிலக்கணம்
சித்தார்த் சண்முகம், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் வசிக்கும் தமிழ் மொழி ஆர்வலரும் எழுத்தாளரும் ஆசிரியரும் ஆவார். இவர் சிலிக்கான் பள்ளத்தாக்கில் மென்பொருட் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது தமிழ்க் காதல் இளம் வயதில் தொடங்கியது. 14 வயதிலிருந்து மரபுப்பாக்கள் எழுதி வருகிறார். எளிமையாய்ப் பாக்கள் எழுதலாம் என்ற நூல் (முழுமையான யாப்பு இலக்கணம்), இவரது ஆழமான மொழி அறிவையும், தமிழ் இலக்கணத்தின் முழுமையான புரிதலையும் காட்டுகிறது.
சித்தார்த் ஒரு திறமையான எழுத்தாளர். அவரது பாடல் தொகுப்பான நெஞ்சத்தைம்பது, தமிழ் மொழியில் எழுதும் பாடல்களின் அழகையும், உணர்வுகளின் ஆழத்தையும் சிறப்பாகக் காட்டுகிறது.
சித்தார்த் ஒரு ஈடுபாடுமிக்க ஆசிரியர் ஆவார். அயலகத் தமிழருக்கும், அவர்தம் குழந்தைகளுக்கும் பல ஆண்டுகளாகத் தமிழ் கற்பித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக, கலிபோர்னியா தமிழ் அகாதமியில் தன்னார்வ ஆசிரியராக வாரஇறுதிகளில் பணியாற்றி வருகிறார். இதன்மூலம், அமெரிக்காவில் வாழும் அயலகத் தமிழர் தம் குழந்தைகளிடம், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கற்பிக்கிறார். 2020ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் அனைவரும் பயன் பெறும் வகையில், இவர் இணையவழித் தமிழ் இலக்கண வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தொடர்புக்கு:
siddaarth.s@gmail.com